கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இன்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #அசாத்சாலி #விசாரணை #கைது #பயங்கரவாத_தடைச்சட்டம்
.