முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலியை கைதுசெய்யப்பட்ட போது அவரது காரில் இருந்து வெளிநாட்டு தயாரிப்புத் துப்பாக்கி மற்றும் ரவை என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரவினர் அவரது காரை சோதனை செய்த போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவா்
இது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடா்பில் அசாத் சாலி நேற்றையதினம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #அசாத்_சாலி #துப்பாக்கி #அஜித்_ரோஹண