இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தாம் நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
HRC இன் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதா அல்லது விலகுவதா என்பது “அவர்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம்”, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள், தீர்மானத்தை இந்தியா “தெளிவாக” ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என, வரவிருக்கும் HRC இன் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு குறித்து தி இந்துவிடம் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 2020 பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தபோதிலும், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆரம்ப கட்ட உரையாடலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்தியாவின் அறிக்கையில், இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதற்கு இணையாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்திருப்பதால், இந்த நேரத்தில் “எங்கள் நம்பிக்கைகள் அதிகம்” எனவும், கடந்த பெப்ரவரி 25ல், ஜெனீவாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தலையிட்டதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்கள் அடுத்த வாரம் வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் சரியான எதிர் விளைவை ராஜபக்ஷ நிர்வாகம் விரும்புகிறது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியாவின் ஆதரவை மிக உயர்ந்த மட்டத்தில் கொழும்பு கோரியுள்ளது, மேலும் இந்தியா தனது இலங்கைக்கான ஆதரவுக்குஉறுதி அளித்துள்ளது என இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார், ஆனால் இது தொடர்பாக புது டில்லி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் 2009 முதல் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை சுட்டிக்காட்டியுள்ள சுமந்திரன், இந்தியாவின் கடந்தகால வாக்களிப்பு முறைகளை மேற்கோள் காட்டி, குறிப்பாக 2009, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் – 2014 ல் இந்தியா மூன்று முறை தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டள்ளார். “இந்த வரலாற்று சாதனைகளின் அடிப்படையில் இந்தியா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.