Home இலங்கையாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு

யாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு

by admin

157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு  யாழ்ப்பாண காவல்நிலையத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற காவல்துறை வீரர்கள் தின நிகழ்வில், யாழ்ப்பாண  சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் காவல்துறைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்தகாவல்துறையினருக்கு  2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நினைவாக  மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது 


குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்சகர்கள்.ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டார்கள் 


இலங்கை காவல்துறை திணைக்களத்தில் இன்று வரை ஆயிரத்து 311 காவல்துறை உத்தியோகத்தர்கள் தமது சேவையின் போது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதோடு ஆயிரத்து 620 பேர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளார்கள்.


 கடமையின்போது, குற்றவாளிகள்  எதிரிகளை கைது செய்யும் நடவடிக்கையின் போது அங்கவீனமாக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் காவல்துறை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது  #யாழ்காவல்நிலையம் #காவல்துறைவீரர்கள்தினநிகழ்வு #காவல்துறைக்கொடி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More