வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வடமாகாண முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வட மாகாண சபையின் 83ஆவது அமர்வின்போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய மேற்படி கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை குழுவின் கால நீடிப்புக்கு மாகாண எதிர்க்கட்சி எதிர்ப்பிளை வெளியிட்ட போதும் காலநீடிப்பு வழங்காவிட்டால் விசாரணைகளில் சிக்கல் ஏற்படலாமென தெரிவித்து அவைத்தலைவர் கால நீடிப்புக்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
ஊழல் மோசடி குறித்து வடக்கு மாகாணத்தின் 4 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விசாரணைக் குழு முன்னிலையில் 21 பேர் சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.