குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜோதிடர் விஜித் ரொஹன விஜேமுனி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என அண்மையில் ஜோதிடர் விஜேமுனி ஆரூடம் கூறியிருந்தார்.
ஜனாதிபதியை அவதூறு செய்யும் வகையில் சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஜோதிடர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி உயிரிழப்பார் என எதிர்வு கூறிய ஜோதிடர் கைது
Jan 31, 2017 @ 18:45
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என எதிர்வு கூறிய ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக வலையமைப்பினை பயன்படுத்தி ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனியை கைது செய்துள்ளனர். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது விஜேமுனி தாக்குதல் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.