நல்லூர் ஆலய சூழலில் ஆலயத்தின் புனிதத்தை பேணும் வகையில் சிலர் நடந்து கொள்ளாமையினால் தான் கழிவு ஒயில் ஊற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது விசமிகள் செயல் என காலை செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை நல்லூர் கந்த சுவாமி ஆலய தரப்பு மறுத்துள்ளது, காதல் ஜோடிகள் தேர் முட்டி உள்ளிட்ட பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது.
நல்லூர் ஆலய சுழலில் புனிதத்தை கெடுக்கும் வகையில் அதனை சூழவுள்ள பகுதிகளில் காதலர்கள், அமர்ந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தமையினால் அவர்கள் அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு ஒயில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.