குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கூகுல் நிறுனம் உதவு தொகை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கூகுல் நிறுவனத்தின் பணிப்பாளர்களே இந்த நிதியத்தை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் ஏழு நாடுகளின் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் குறித்த உதவு தொகை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உதவு தொகையின் ஊடாக சுமார் 4 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் கூகுல் நிறுவனம் நிதி திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.