இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்துகின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பானஅறிக்கைகளை அடுத்தே சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பரீட்சார்த்த சோதனைகள்(Child vaccine trial) இடை நிறுத்தப்படுவதாக ஒக்ஸ்போர்ட் அறிவித் துள்ளது.
“பரிசோதனைகளில் பாதுகாப்புத் தொடர்பான எந்தக் கவலைகளும் இல்லை. ஆனால் அது தொடர்பில் அறிவியலாளர்கள் மேலும் தகவல்களை எதிர்பார்த்துள்ளனர்” -என்று ஒக்ஸ்போர்ட்(Oxford) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசி ரியர் Andrew Pollard பிபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
ஆறு வயது முதல் 17 வயது வரையானோரிடையே தடுப்பூசி வலுவான நோயெதி ர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றதா என்பதை அறிவதற்காக இந்தப் பரீட்சார்த்தசோதனைகள் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 300 சிறுவர்கள்பரிசோதனைக்குத் தெரிவாகி இருந்தனர்.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றிய பின்னர் சிலர் இரத்தம் உறைதல்,மூளையில் இரத்தக் கட்டி போன்ற பக்க அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர். மரண ங்களும் பதிவாகி உள்ளன. பிரான்ஸில் ஏற்பட்ட இரண்டு உயிரிழப்புகளுக்கு பொறுப்புக் கூறுமாறு கேட்டு உறவினர் கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
—————————————————————-