கலைகள் மனித வாழ்வியலுடன் இன்றியமையாத தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. நவீன கலைகளின் தாக்கத்தால் கலைகள் தனியுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பாதகத்திலிருந்து நீக்கம் பெறுவதற்கு உலகில் பல்வேறு
கலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இதில் கலைச்செயல்வாதம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயற்பாடாகக் காணப்படுகின்றது.
கலைச்செயல்வாதம் என்பது சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு தேவையான படைப்புச் சக்தியை இணைக்கும் ஓர் மாறும் நடைமுறையாகும். (கலைச்செயல்வாதம் 1930களில் ‘பால் போடன்’ என்பவர் இதன் தொடக்க செயற்பாட்டாளராக காணப்படுகின்றார்.) செயல்வாதம் பொருள் உலகத்தை நகர்த்துகின்றது. அதேநேரத்தில் கலை இதயம்ரூபவ் உடல் மற்றும் ஆன்மாவை நகர்த்துகின்றது. செயல்வாதத்தின் ஊடாகச் சமூக மாற்றம் மாத்திரம் இடம்பெறாது அது தொடர் தேர்ச்சியாக
நிகழ்கின்றது. ஏனெனில் இனூடாக மக்கள் மாற்றத்தை செய்வதற்கு முடிவு செய்கிறார்கள். அதாவது கலைச்செயல் வாதமானது உணர்ச்சி ரீதியான சக்திவாய்ந்த தூண்டுதலினால் தூண்டப்படுகிறார்கள். இது கலையாக்கம்
கலைச்செயற்பாட்டின் பிரதான செயற்பாடு எனலாம்.
கலை மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகள் உலகின் வேறுவேறு வேலைகளைச் செய்கின்றன. மேலும் அதிகார
உறவுகளை மாற்றல், கேள்வி எழுப்பல், சவால்களுக்கு உள்ளாக்கல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. செயல்பாட்டை செய்வதற்கும் ஒரு செயற்பாட்டாளராக இருப்பதற்கும் பல வழிகள் உள்ளன.
பொதுவாக கூறினால் தெளிவான முடிவை இலக்காகக்கொண்ட ஒரு செயலையும் செயற்பாட்டின் குறிக்கோளானது ஒருவிளைவை உருவாக்குவதற்கான செயலாகவும் காணப்படும். இத்தகைய கலைச்செயற்பாடானது உலகத்தை கற்பனை செய்வதற்கான முன்னோக்காகவும் புதிய வழிகளை வழங்குவதாகவும் இருக்கின்றது. மேலும் ஒரு உணர்வைத்தூண்டுவதாகவும் உணர்ச்சி
ரீதியாக கருத்தை மாற்றுவதாகவும் சமமாகரூபவ் எளிமையாகக் கூறப்பட்டால் பாதிப்பை உருவாக்கும் ஒரு வெளிப்பாடாகவும் கலைச்செயல்வாதம் காணப்படுகிறது.
உறுதியான விளைவுகளை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு பயனுள்ள அனுபவங்களால் நகரத்தப்படுகின்றது.
அதாவது இது ஒரு பாதிப்பு விளைவிற்கு வழிவகுக்கின்றது. கலைச்செயல்வாதமானது பாதிப்பு விளைவு அல்லது பாதிப்பிற்கு வழிவகுக்கின்றது எனக் கூறலாம். புதிய வார்த்தையில் Effect ( Aye – fect ) என உச்சரிக்கப்படுகின்றது. கலைச் செயல்வாதம் என்பது நுககநஉவ உருவாக்குவதை நோக்காகக்கொண்ட ஒரு நடைமுறையாகும்.
உணர்ச்சி ரீதியாக ஒத்ததிர்வு அனுபவங்களாகும். அவை அதிகாரத்தில் அளவிடக்கூடிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். கலையாக்கச் செயற்பாடானது ஒரு பயனுள்ள செயற்பாடாவதுடன் செயல்திறன் அல்லது அனுபவமாகக் காணப்படுகின்றது. கலைச்செயற்பாடு குறிப்பாக சமகால தருணத்திற்கு மிகவும் பொருத்தமானது என்றாலும்
வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழகியல் அணுகு முறைகளைப் பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஓர் பிரச்சாரங்களை வழங்குவதற்காகவும் பயன்படுகின்றது.
கலைச்செயற்பாடு நிலையான அரசியல் கருத்துக்கள் மற்றும் தார்மீக லட்சியங்களைத் திறப்பதற்கும் அறிவாற்றல் வடிங்களை மாற்றியமைப்பதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்குகின்றது. கலையாக்கச் செயற்பாட்டில் உள்ளத்தில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புக்கு துணை நிற்கின்றது. கலைச்செயற்பாடு என்பது அணுகக்கூடியதாகக் காணப்படுவதுடன் படைப்பாற்றல் என்பது ஒருவரிடம் ஏற்கனவே இருக்கும் திறனாகும். சிறந்த திறன்களையும்
செயல்வாதத்தின் ஊடாக கற்றுக்கொள்ளமுடியும்.
கலைச்செயற்பாடானது பல்வேறு அர்த்தங்களுடன் இயங்குவதால் இது பார்வையாளர்களை இணைக்க உதவுகின்றது. மேலும் கலைச்செயற்பாடு படைப்பாற்றலைத் தூண்டுகின்றது. கலை செயல்வாதமானது ஏனைய கலைவடிங்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக காணப்படுகின்றது. புதுமையானதாகவும் புதிய
தந்திரோபாயங்கள், உத்திகள் குறிக்கோள்களை கற்பனைசெய்ய செயல்வாதம் உதவுகின்றது. பிரச்சனைகளுக்கான
தீர்வுகளைக் கண்டறிவதற்கு பல வழிகளில் துணைபுரிகின்றது.
கலையாக்கம்ரூபவ் கலைச்செயற்பாட்டில் ஆக்கபூர்வமான விடயங்களை செயன்முறைப் படுத்துவதற்கும் அதனை பிரதி பலிப்பதற்கும் கலைச்செயல்வாதம் ஊக்குவிக்கின்றது. இக் கலைச்செயல்வாதமானது மக்கள் மற்றும் ஏனைய
அமைப்புக்களையும் ஊக்குவிக்கின்றது. ஒவ்வொரு கலைஞனிடமும் உள்ள கலைப்படைப்புக்களையும் கலைஞனையும்
கலைப்படைப்புடன் இணைக்க உதவுகின்றது.
வாழ்வினை மீண்டும் ஒருங்கிணைப்பதாகவும் மகிழ்வினை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. வாழ்வியலை மீண்டும் புதிய மாற்றங்களுடன் செயற்படுத்தவும் உதவுகின்றது. அதேபோன்று நீண்டகால மாற்றத்தை உருவாக்கவும் நிலை நிறுத்துவதற்கும் நடத்தை முறையில் மாற்றத்தை உருவாக்கவும்
துணைபுரிகின்றது. விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத சாத்தியமானரூபவ் சாத்தியமற்ற கருத்துக்களின்
வரையறைகளைக் கோடிட்டுக்காட்டுகின்றது.
செயற்பாட்டுக்கலையானது சமூக அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான
வழிமுறையாகவும் காணப்படுகின்றதுரூபவ் சமூகம்ரூபவ் பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் பொது இடத்தை
பயன்படுத்துவதை ஒருங்கிiணைக்கின்றது. செயல்வாதம் உரையாடலில் பங்கேற்பதை வளர்க்கின்றதுரூபவ் ஆற்றல்களை
அதிகரிப்பதற்கும் தனிநபருக்கும் சமூகத்திற்கும் அதிகாரத்தை அளிப்பதற்கும் செயன்முறைகளில் ரூடவ்டுபடுவதன்
மூலம் சமூகமாற்றத்தைக் கொண்டுவருவதற்கு துணைபுரிகின்றது. சிறந்த கலையானது பார்வையாளரின் அடிப்படை
உணர்சியைத் தூண்ட வழிவகுக்கின்றது. கலைச் செயல்வாதம் என்பது குறிப்பிட்ட ஒரு நாட்டிற்குறிய தனிமைப் படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல அது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒன்றாக காணப்படுகின்றது.
மேலும் இது பொது மக்களுக்கு வேறுபட்ட உணர்வை வழங்குகின்றது, செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்களை அழகியல்
சமூக அரசியல்ரூபவ் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றங்களைக் காண்பதற்குத் துணைபுரிகின்றது. சமூகத்தில் தாழ்த்தப்பட்ட அடிநிலையில் உள்ள அனைத்து பொது மக்களையும் இணைக்கக்கூடிய செயன்முறையாகவே கலைச்செயல்வாதம்
அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைச் செயல்வாதத்தின் ஊடாக சமூக அசியல் கருத்துக்களை உள்வாங்கக்கூடியதாக காணப்படுவதால் இக்கலைச்செயற்பாட்டில்
அனைவரையும் உள்வாங்கக்கூடியதாகக் காணப்படும். கலைச் செயல்வாதம் என்பது ஒரு செயற்பாடாக எப்போதும்
செயற்படுவதாக கூறப்படுபவர்களால் செய்யப்படும் ஒரு செயலல்லரூபவ் கலைச் செயல்வாதி என்பது செயலில் ரூடவ்டுபடும் அனைவருக்கும் பொருந்துவதாக காணப்படும்.
செயல்வாதம் என்றவார்த்தை கூட்டு நடத்தை, சமூக நடவடிக்கை பற்றிய புரிதல்களையும் குறிக்கின்றது. ‘1969ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு அரசியல் முக்கியத்துவத்தை பொருட்படுத்தாமல் முடிவு மற்றும் ஆற்றல் என்பவற்றுடன் காரியங்களைச் செய்வதற்கான கொள்கை அல்லது நடைமுறை என வரையறுக்கப்பட்டது’ மேலும் சமூக நடவடிக்கை, நடத்தைகளை மேம்படுத்த ஒரு குழுவின் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை எனவும் கூறப்படுகின்றது.
செயற்பாட்டாளர் கலை என்பது செயல்முறை சார்ந்ததாகும். நடைமுறையில் செயற்பாட்டாளர் கலை பெரும்பாலும்
செயல்வாதத்தின் ஊடாக நிகழ்வுகள் செயற்பாடுகளை சமூகத்தின் மத்தியில் வெளிப்படுத்துவதாக காணப்படும். கலைச்செயற்பாடு நிலையான அசியல் கருத்துக்கள் மற்றும் தார்மீக இலட்சியங்களைத் தவிர்ப்பதற்கும் அறிவாற்றல் வடிவங்களை மாற்றி யமைப்பதற்குமான வாய்ப்பை வழங்குகின்றது.
மேலும் கலைச்செயல்வாதம் கலாச்சாரத்தின் பரிமாணத்திற்கும் அரசியல்ரூபவ் பொருளாதார, சமூக சக்திகள், இயக்கங்கள்ரூபவ் சமூக மாற்றச்செயல்களில் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணைபுரிகின்றது. கலை உலகில் 1960 களின் பிற்பகுதியில் இருந்து 1970 களில் செயற்திறன் கலைரூபவ் காட்சிக்கலைகள் என விரிவுபடுத்தப்பட்டன. மேலும் செயல்வாத கலை பார்வையாளரின் ரூடவ்டுபாட்டிற்கு துணைபுரிவதுடன் ஊடகத்தின் வெளிப்படைத்தன்மைரூபவ் உடனடித்தன்மைரூபவ் பொதுமக்களின் பங்கேற்பை ஏற்றல்ரூபவ் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும்
மையமாகவும் காணப்படுகின்றது.
சகாயராஜா புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்ரூபவ்
இலங்கை.