190
இன்று (25) முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச வைபவங்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தனியார் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
COVID – 19 பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love