பகிரங்கமாக அதிகம் அறியப்படாதவர் ஆனால் அடக்கமாக அதிக சாதனைகள் செய்தவர் -வீணைக் கலைஞரும் புவியியல் பேராசிரியையும் கல்விமானியும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தருமான யோகா ராஜநாயகத்திற்கு அஞ்சலிகள்
1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் முதலாம் வருட மாணவன். 19 வயது மாணவன் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற எனது கவிதையான
“பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது” எனும் நெடிய கவிதையை கலைப்பீட மண்டபத்தில் மாணவ்ர்கள் திரண்டிருந்த பேரரங்கில் உணர்ச்சி பாவத்தோடு வாசிக்கிறேன், விடலைப் பையன். சத்தம் போட்டு அபிநயத்தோடு வாசிக்கிறேன் நிறைந்த கைதட்டல்கள்கவி அரங்கு முடிய பலர் வந்து வாழ்த்திச்செல்கிறார்கள்..
‘அவர்களுள் நானும் ஒருத்தி மௌனகுரு ‘
என்று மிகப்பின்னாளில் யோகா அக்கா கூறியபோது நான் அசந்துபோனேன்,
பதிலுக்கு நானும் அவரிடம் பல்கலைக்கழக , தமிழ் விழா ஒன்றில் அவர் வீணை வாசிப்பினைக் கேட்ட அனுபவத்தையும் அதனைப் பார்த்து நான் வியந்தமையையும் பகிர்ந்து கொண்டேன்
இப்படித்தான் 1961 இல் எங்கள் உறவு நிகழ்ந்தது,
அப்போது அவர் புவியியல் சிறப்பு நெறி பயின்றுகொண்டிருந்தார். பல்கலைக்கழக மாணவி, எனக்கு மூன்று வருட சீனியர் சுப்பர் சீனியர் என பல்கலைக்க்ழக பாசையில் அழைக்கலாம்
அப்போது அவர் பெயர் யோகா சுப்பிரமணியம்
1962, 1962, 1964 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் முறையே
கர்ணன் போர்
நொண்டி நாடகம்
இராவணேசன்
முதலான நாடகங்களை மேடையிடுகிறார்
அதில் பிரதான பாத்திரங்கள் எனக்குத் தரப்பட்டன.அந்த நாடகங்களைத் தவறாது பார்வையிட்டு ஊக்கம் தந்ததுடன் வித்தியானந்தனுக்கு உதவியாகவும் இருந்தார் அக்கா
இசைநடனம்மீதுமாளாக்காதலும்திறனும்கொண்டிருந்தயோகாஅக்காஎமதுநாடகங்களின்தொடர்ரசிகையுமானார். நாடகம் முடிய வந்து பாராட்டிச்செல்பவருள் அவரும் ஒருவர்.
அப்போது, வித்தியானந்தன்தமிழ்சங்கப்பெரும்பொருளாளர்.
யோகாஅக்காவும்தமிழ்சங்கத்தின்தீவிரஅங்கத்தவர்.
‘இதனால் அவருடனான உறவு எனக்கு மேலும் அதிகமானது
பேராசிரியர் வித்தியானந்தனுக்கு மாத்திரமன்றி பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவுக்கும் அவரது சிங்கபாகு நாடகத்திற்கு வீணை இசைத்தவர் யோகா அக்கா
சிங்கள நாடகம் ஒன்று தமிழ் வீணசி இசையுடன் மேடையேறுகிறது
படித்து முடிய அங்கேயே அவருக்கு விரிவுரையாளார் பதவியும் கிடைத்தது . மாணவ்ரின் பெரு விருப்பிற்குரிய ஆசிரியையுமானார்
பேராசிரியர்களான
குலரத்தினம்.
ஜோர்ஜ் தம்பையாபிள்ளை
செல்வனாயகம் ஆகிய புவியியல் விற்பன்னர்களின் விருப்பிற்குரிய மாணவி யோகா அக்கா
அவரின் கீழ்தான்
பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை,
செங்கை ஆழியான் குண்ராஜா
செம்பியன் செல்வன் போன்றோர் புவியியல் பயின்றனர்
பேரா. பாலசுந்தரம்பிள்ளை பின்னாளில் புவியலை ஆழப்படுத்தி யாழ். பல்கலைக்ழகத்தில் வளர்த்தார் குணராஜாவோ அதனை பாடநூல்கள் எழுதி அதனைப் பாடசாலை மட்டத்தில் பரவலாக்கினார்
யோகா அக்கா புவியல் பேராசிரியர்களான
பாலச்சந்திரன்,
சிவச்சந்திரன்
குகபாலன்
ஆகியோரினதும் இன்னும் பல புவியியல் விற்பன்னர்களினதும் ஆசிரியரும் கூட
இவர்கள் அனைவரும் அக்காவின் விருப்பிற்குரியவர்கள்
இவர்கள் யாவரும் துணைவேந்தர்களாகவும் பீடாதிபதிகளாகவும் துறைத்தலைவர்களாகவும் பணியாற்றி புவியியலை வளர்த்தெடுத்தவர்கள். இவ்வகையில் ஓர் புவியியல் அறிஞர் பரம்பரையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் யோகா அக்கா
அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் ராஜநாயகம் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது,
ராஜநாயகம்அவர்கள்அப்போதுமட்டக்களப்புகளுவாஞ்சிக்குடியில்டிஆர்ஓவாகஇருந்தார்அதாவதுஅன்றைய DISTRICT REVENUE OFFICER பின்னர்இவர்மேற்குமாகாணஆளுநரின்செயலாளராகக்கடமைபுரிந்துஓய்வுபெற்றார்
தமிழில்ஆராக்காதல்கொண்டவர்ராஜநாயகம்
தமிழ்இலக்கியங்களில்பாண்டித்தியம்மிக்கவர். தேவாரதிருவாசகங்களைஉருகிஉருகிப்பாடுவார். ஒருவகையில்மரபுவாதிபழமைபோற்றும்பண்பினர்
அரசஉத்தியோகத்தில்இருந்துகொண்டேதமிழ்அபிமானத்தால்பேராதனைதமிழ்த்துறையில்தமிழ்எம்ஏபடித்துக்கொண்டிருந்தார்
, நான்அப்போதுபிஏஆனர்சுதமிழ்சிறப்புஇறுதிஆண்டிலிருந்தேன்
இருவரும்ஒருவகையில்ஒரேஅலைவரிசையில்பிரயாணம்செய்தமையினால்இராஜநாயகம்அவர்களின்உறவும்எனக்குக்கிடைத்தது.
இருவரும்இணைந்துபடித்தோம்
எனமீதுராஜநாயகம்பிரியமானவரானார்
இராஜநாயகமும் யோகா அக்காவும் காதலர்களானார்கள்
தமிழும் இசையும் இணைந்தன
இரண்டு இளம் சிட்டுகள் பேராதனை வளாகத்திலும் பேராதனைப் பூங்காவிலும் இசைபாடித் தமிழ் பேசிப் பறந்து திரிந்தன
நானும் இராஜநாயகம் அவர்களும் யோகா அக்காவும் அமர்ந்து அந்தக் கன்ரீனில் தேநீர் அருந்திய காலங்களும் ஞாபகம் வருகின்றன
பின்னாளில் யோகா அக்கா லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்ழகத்திற்கு புவியியலில் பி,எச்டி பண்ணச் சென்றார்
அப்போது அவர் ஒரு குழந்தையின் தாயாரும் கூட. மூத்த குழந்தை ஆரணி அப்போது ஆறுமாதக் குழந்தை
பெண் குழந்தையை பிரிந்து தூர தேசம் செல்ல அந்த தாய் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
குழந்தை வளர்ப்பின் முழுப் பொறுப்பையும் தான் எடுத்துக்கொண்டு தயங்கி நின்ற மனைவிக்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தார் ராஜநாயகம். பின்னர் யோகா அக்கா வரும் வரை தாயாகி அந்த ஆரணிக் குழந்தையை வளர்த்தெடுத்தார் ராஜநாயகம்
யோகா கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Industriyal Geography இல் பி எச் டி பட்டம் பெற்றார். பி எச்டி முடித்துத் திரும்பிய யோகா அக்கா கொழும்பு பல்கலைக்கழகப் புவியியல் விரிவுரையாளரானார்,
பின்னர் கொழும்புப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரானார், அதன் பின்னர் கொழும்புப்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியுமானார் எக்கமனதாக அப்பதவிக்கு அவர் தெரியப்படார் என்பது பலர் அறியாத செய்தி பின்னர் கிழக்குப் பல்கலைகழக வேந்தராகவும் நியமிக்கப்பட்டார்.
இவ்வகையில் இலங்கையில் புயியற்துறைத் தலைவரான முதல் தமிழ்ப்பெண் பல்கலைக்ழக கலைப்பீடாதிபதியான முதல் தமிழ் பெண் பல்கலைக்கழக வேந்தரான முதல்தமிழ்ப்பெண் என்ற முதன்மைகளுக்கு உரியவரானார். அவரின் பங்களிப்பு கொழும்புப் பல்கலைக்ழகத்திற்கு அளப்பரியது பெரும்பான்மையின மாணவ்ர்கள் அதிகம் பயிலும் அப்பல்கலைக்ழகத்தில் ஓர் தமிழர் அதிலும் சிறுபான்மை இனத்தவர் அதிலும் ஓர் பெண் துறைத் தலைவராவதும், கலை[ப்பீட பீடாதிபதியாவதும் அன்றைய சூழலில் நினைத்துபார்க்கமுடியாத ஓர் காரியமாகும் இவ்வகையில் அவர் தன் நடத்தையாலும் குணதிசயங்களாலும் அழ்ந்த புலமையாலும் அனைவரையும் இணைக்கும் பண்பினாலும் அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்திருந்தார் 2011 இல் அவர் கிழக்குப் பல்கலைக்க்ழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். ஓர் பெண் வேந்தரை கிழக்குப் பல்கலைக்க்ழகம் வரவேற்றது பதவி பெற்று கிழக்குப் பல்கலைக்க்ழகம் வந்த அவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார்.
அன்றைய அவரது மதியப் பொழுது எம்மோடு மகிழ்ச்சியான உரையாடலில் கழிந்தது. என் மனைவி சித்ரலேகாமீது மிகவும் பிரியமும் மதிப்பும் கொண்டவர் அவர்.
யோகா அக்கா ஒர் பிரகடனப்படுத்தப்படாத பெண்ணிய ஆதரவாளர் பெண்கள் கல்வியில் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. இந்தப் பெண்னியக் கருத்து நிலைதான் அவரையும் சித்திரலேகாவையும் இணைத்தது, பழைய நினைவுகளை அன்று நாம் மீட்டிக்கொண்டோம் 1960 கள் பேராதனை கால ஞாபகத்தில் மூழ்கிக் கிடந்தோம் அவர் பிறந்தது 1939 இல் அவரது தந்தையார் கதிரவேற்பிள்ளை தாயார் சிவகாமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அரசாங்க புகையிரதப்பகுதி எழுது வினைஞர் அவர் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையார் ஐந்தாறு பெண்பிறந்தால் அரசனும் ஆண்டியடா என்பது பழமொழி ஆனால் அவரது ஐந்து பெண்பிள்ளைகளும் பேர் புகழ் பிரசித்தம் எனும் பெரும் செல்வத்தை தந்தைக்கு அள்ளி அள்ளி அளித்தனர்
முதல் பெண் ஞானபூசணி அம்பிகா தாமோதரம் இன்று லண்டனில் சர்வதேச கர்நாடக இசைபாடத்திட்ட பரீட்சைகுழுவினை இயக்குகிறார்.
இரண்டாவது பெண் பேராசிரியை ஞானா குலேந்திரன் யாழ்ப்பாணத்தில் இந்து நாகரிகத் துறை விரிவுரையாளராகவும் பின்னால் தஞ்சாவூர்த் தமிழ்பல்கலைக்கழக இசைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர் இன்று அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார் மூன்றாவது பெண் நமது யோகா ராஜநாயகம் வீணை வாய்ப்பாட்டு வல்லுனர் நான்காவது பெண் கலாசூரி நாட்டிய ஆச்சாரிய ஜெயலக்சுமி கந்தையாஅவுஸ்திரேலியாவில் நடன கலாலயம் எனும் நடன அக்கடமி நடத்தி வருகிறார் ஐந்தாவது பெண் கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் கொழும்பு கவின் கலைப் பல்கலைக்க்ழக வருகை தரு இசை விரிவுரையாளர் அருஶ்ரீ கலையகம் மூலம் நிறுவி நிகழ்வுகளை அளித்து வருகிறார் இலங்கை ஒலிபரப்புகூட்டுத் தாபனத்தின் பணிப்பாளராகவும் கடமை புரிந்தவர் இவர்கள் சகோதரிகள் அனைவரும் இசை நடனம் வீணை என கவின் கலைத்துறையிக்கு பெரும் பங்களித்தவர்கள்
இந்தக் குடும்பச்சூழல் நமது யோகா அக்காவுக்கு கிடைத்த ஒரு பேறு எனலாம் இவர்களிற் சிலருடன் எனக்கு உறவுண்டு, அது எமக்குள் ஏற்பட்ட ஓர்கலை உறவு அக்குடும்பம் ஓர்கலைக்குடும்பம்
அவர் கல்வி கற்றது கொழ்ம்பில் கொழும்பு இந்து மகள்ர் கல்லூரியிலும் கொழும்பு மெதடிஸ்த கல்லூரியிலும் பயின்றவர் அதனால் அவருக்கு அங்கு பலருடனும் இணைந்து ப்ழகும் வாயோஉகிடைத்தது மொழி இன, மத,பிரதேச பேத எண்ணங்கள் சிறிதும் இல்லாத உயர்ந்தபரந்தமனதினர் யோகா ராஜநாயகம் அவர்கள்.
அவரது ஆய்வுத் துறையும் குறிப்பிடற்குரியது சர்வதேச புவியியற் கழகத்தின்( ) நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராகவும்
பாலினம் சம்பந்தமான கமிசனின் உறுப்பினராகவும்
ஐக்கிய அமெரிக்காவின் ஹரிசான் பல்கலைக்கழக
அமெரிக்க மிச்சிக்கான் பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளராகவும் பணி புரிந்தவர்
சமூக விஞ்ஞான தேசிய கற்கைகள் நெறிநிறுவகத்தில் புலமைசார் ஆலோசகராகப்பணிபுரிந்தவர்
அவரது கல்விப்பணியை மதித்து பாராட்டி கொழும்புப் பல்கலைக் கழகம் அவருக்கு 2005 இல் கௌரவ கலாநிதி பட்டம் அளித்துக் கௌரவித்தது
இத்தனை கல்விப்பணி புரிந்த அவரைக் கௌரவிப்பதற்காக அரசு அவர் பெயரில் ஓர் வீதியை கொழும்பு வெள்ளவத்தையில் அவர் வாழ்ந்த இடத்தில் திறக்க முன் வந்தது.
தனது பெயர் போடப்படுவதை அவர் மறுத்துவிட்டார், என அறிகிறேன்அதனால் அவ் வீதிக்கு வேந்தர் வீதி எனப்பெயரிடப்பட்டது
தன் செயல்களை வெளிகாட்டிக்கொள்ளாது அடக்க்மாகப் பணிபுரிந்தவர் அவர்
அவருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவர் பெண்பிள்ளை ஆரணி கனடாவில் இருக்கிறார்
அவரது மகன் ஏரகன் அமெரிக்காவில் டெல் கம்பனியின் முக்கிய அதிகாரி
அமெரிக்கா, கனடா சென்று வாழச் சந்தர்ப்பம் இருந்தும் அவர் அங்கு சென்று வாழ்ப்பிரியப்படவில்லை
சொந்த நாட்டிலேயே வாழ்ந்து மடிய நினைத்தார்
அவரின் திறமைகள் அறிந்து பல ஆலோசனைச் சபைகளுக்கு உயர்கல்வி அமைச்சு யோகா அக்காவை உறுப்பினராக ஆலோசகராக நியமித்தது.
அவரின் அனுபவங்களை உயர் கல்வி அமைச்சும் பல்கலைக்க்ழக மானிய ஆணைக்குழுவும் நன்கு பயன் படுத்திகொண்டன
ஆனாலும் என்ன ?
தமிழ் மக்கள் அதிகம் ஆறியாத ஒருவராகவே வாழ்ந்து விட்டார் யோகா அக்கா
அவரது இறுதிக்காலங்கள் ஒரு வகையில் துயரமானவை.
மனதை வருத்துபவை
நோயுற்றுப் படுக்கையில் வீழ்ந்து விட்டார் அவரது அன்புக்கணவர் ராஜநாயகம்
துணை சரிந்து விட்டது
ராஜநாயகம் சிங்கம் போல வாழ்ந்தவர். ஓர்மம் மிகுந்தவர் யாருக்கும் அஞ்சாதவர் அந்த நோய்வாய்ப்பட்ட சிங்கமான இராஜநாயகத்தை ஓர் தாய்போல் அருகில் இருந்து பராமரித்தார் யோகா அக்கா
சில காலங்களில் அவரது கணவ்ர் இறந்து விட்டார்,
பிள்ளைகளோ அருகில் இல்லை: வெளி நாட்டில்
சகோதரிகளும் வெளி நாட்டில்.
நோயும் முதுமையும் தனிமையும் அவரைச் சூழ்ந்து கொண்டன
தாதியர்களின் பராமரிப்பில் அவர் தனியே வாழ்ந்தார்
தனிமை தனிமை தனிமை
முதுமை முதுமை முதுமை
கொரானா இன்னும் அவரைத் தனிமைப்படுத்தி விட்டது. இடையில் ஓரிரு தடவைகள் அவருடன் பேசியிருப்பேன்
ராஜநாயகத்தின் மறைவுக்குப் பின் அவர் டஹ்னித்துப்போனதாக உணர்ந்தார்
இறுதியில் அவரும் கொரனாத் தொற்றுக்கு ஆளானார் என வைத்திய அறிக்கைகள் கூறின
அவரது இறந்த உடல் கொரனா விதிகளின்படி எரிக்கப்பட்டது
அங்கும் தனிமைதான்
தனிமையும் முதுமையும் கொரனாவும் அவரைக் கொள்ளை கொண்டுவிட்டன
கிழக்குப் பல்கலைக்ழகம் தனது முன்னாள் வேந்தர் மறைந்ததை அறிந்திருக்கவில்லை
நேற்று நான் பதிவாளர் பகீரதனுக்கு போன் பண்ணிச் செய்தி சொன்னேன்
அவர் யோகா அக்காவின் மறைவுச்செய்தி அறிந்திருக்கவில்லை
எனது தகவலுக்கு நன்றி கூறிய அவர் அடுத்த நாள் உடனடியாக ஓர் அனுதாபப் பதாகை தொங்கவிடுவதாக என்னிடம் கூறினார்
அவரைப்பற்றி ஓர் பெரிய கட்டுரை எழுதும் நோக்கில் இணையத்தில் சுற்றிவந்தேன் அவர் பற்றிய தகவல்கள் எதனையும் காணமுடியவில்லை. விளம்பரத்தை விரும்பாதவராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது
டெயிலி நியூஸில் வந்த ஒரு கட்டுரையை எனக்கு அவர் உறவினரான ருசாங்கன் அனுப்பியிருந்தார்
பேராதனைப் பல்கலைக்க்ழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழ்கம் அகிய முன்னணிப் பல்கலைக் க்ழகங்களில் படித்து
அமெரிக்க பல்கலைக்ழகங்களில் வருகைதரு விரிவுரையாளராக இருந்து
பல உயர் கல்விநிறுவனங்களில் பணிப்பாளராயும் ஆலோசகராகவும் இருந்து
பெரும் பெரும் பதவிகள் வகித்து
அதிகம் பேசப்படாமலேயே அதிகம் மக்களால் அறியபடாமலேயே சென்று விட்ட
அந்த அற்புத மனுசியின் இழப்பு மனதில் பெரும் பாரமாக இறங்குகிறது
சென்று வாருங்கள் அக்கா கனத்த மனதோடு உங்களை அஞ்சலிக்கிறேன்.