யாழ் -கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் படுக்கை ஆசன சேவை ஆரம்பம் என யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இம்மாதம் 7ஆம் திகதியிலிருந்து இரவு நேர தபால் சேவை புகையிரதத்தில் படுக்கை ஆசன சேவை யாழ்ப்பாணம் – கொழும்பு இரவு நேர தபால் புகையிரத சேவையில் இணைத்து கொள்ளப்பட வுள்ளதாக யாழ் புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்
இரவு நேர தபால் புகையிர சேவை யில் குறித்த படுக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளதாகவும் சேவையினை பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்,
அதேவேளை, தற்போது புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவிய போது ,
அதில் எவ்வித உண்மையும் இல்லை கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து மீண்டும் 1 .15மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு 1 .37மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்படும் நகர் சேர் கடுகதி புகையிரத சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.