Home இந்தியா 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் DMK முன்னிலையில்…

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் DMK முன்னிலையில்…

by admin
oneindia
    • தொடர்ந்து முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமிedapadi palanisamyGetty ImagesCopyright: Getty Imagesஇன்று காலை முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.அந்த தொகுதியில் கடைசியாக வெளியான தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமி 24565 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.அதேவேளையில், நெல்லை தொகுதியில் நான்காம் சுற்றில் 4424 வாக்குகள்கூடுதலாக பெற்று பாஜக முன்னிலை வகிக்கிறது.பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இதுவரை 13,239 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 6:536:53சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலைmk stalinMK STALIN @FACEBOOKCopyright: MK STALIN @FACEBOOKதமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையின் மற்ற 15 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 6:296:29போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பின்னடைவுopsGetty ImagesCopyright: Getty Imagesதபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்த பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடியை போடி தொகுதி வாக்காளர்கள் அளித்துள்ளனர்.போடி சட்டமன்ற தொகுதியில் இரண்டம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக 6538 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 6414 பெற்றுள்ளது.துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் போட்டியாளராக விளங்கும் தங்க தமிழ்செல்வன் தற்போது முன்னிலையில் இருக்கிறார்.போடி தொகுதியில் 2011 மற்றும் 2016ல் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றிருந்தார்.தற்போது அதிமுக சார்பில் பன்னீர்செல்வம், திமுக சார்பில் போட்டியிட்டுள்ள தங்கதமிழ்செல்வன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிட்டுள்ள முத்துசாமி ஆகிய மூவரும் பல ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 6:236:23புதுவை தொகுதிகளின் நிலவரம்புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களுக்கான தேர்தல் நிலவரம்.தேசிய ஜனநாயகக் கூட்டணி – 8; என்.ஆர்.காங்கிரஸ் – 6 பாஜக – 2மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி – 1 காங்கிரஸ் – 0 திமுக – 1 சுயேட்சை – 1காமராஜர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 3849 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 2132 வாக்குகள் பெற்றுள்ளார்.நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிச்சர்ட் ஜான்குமார் 2847 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் மாஸ்டர் 2651 வாக்குகள் பெற்றுள்ளார்.உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிப்பால் கென்னடி 4109 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன் 2141 வாக்குகள் பெற்றுள்ளார்.கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் 5714 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வானந்த் 1079 வாக்குகள் பெற்றுள்ளார்.மங்கலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் 4566 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சன் குமாரவேல் 3926 வாக்குகள் பெற்றுள்ளார். ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் 4768 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 3637 வாக்குகள் பெற்றுள்ளார்.காரைக்கால் பிராந்தியம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா 4180 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 2606 வாக்குகள் பெற்றுள்ளார்.காரைக்கால் வடக்கு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் 3738 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், வேட்பாளருமான ஏ.வி.சுப்ரமணியன் 3553 வாக்குகள் பெற்றுள்ளார்.ஏனாம் பிராந்தியம் ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் வேட்பாளருமான என்.ரங்கசாமி 1174 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் 1036 வாக்குகள் பெற்றுள்ளார்.மாஹே பிராந்தியம் மாஹே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத் 1285 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிதாசன் மாஸ்டர் 1139 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 6:206:20அதிமுக, திமுக முன்னணி நிலவரம் ; அண்மைய தகவல்  என்ன?electionhttps://results.eci.gov.in/Copyright: https://results.eci.gov.in/தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், இதுவரை திமுக 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.அதேவேளையில் ஆளும் அதிமுக 75 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.இதில் பதிவேற்றப்பட்ட அண்மைய தகவல்களின்படி, அதிமுக கூட்டணியில் பாமக 9 தொகுதிகளிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.கமலஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் முன்னிலை பெற்றுள்ளது.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 6:106:10வாக்கு எண்ணிக்கையில் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவுjeyakumarBBCCopyright: BBCதமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், விழுப்புரம் தொகுதியில் சி வி சண்முகம்,ஆவடி தொகுதியில் பாண்டியராஜன், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கோவில்பட்டி தொகுதியில் தபால் வாக்குகளில் முதலில் அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார். தற்போது இவிஎம் வாக்கு எண்ணிக்கையின் படி, அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் உள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:385:38கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலைகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.இவர் முன்னாள் எம் பி வசந்தகுமாரின் மகன் ஆவர். வசந்தகுமாரின் மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்திக்கிறார்.இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், பாஜக 35.22 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 56.98 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 7.33சதவீத வாக்குகளை மற்ற வேட்பாளர்களும், நோட்டாவுக்கு 0.47சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:365:36சேலம் மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலைsalemBBCCopyright: BBCசேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் எடப்பாடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் முதலமைச்சர் பழனிசாமி 11331 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத் குமார் 4594 வாக்குகளும் பெற்றுள்ளார்.இரண்டாவது சுற்று நிலவரப்படி 6737 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார் எடப்பாடி கே. பழனிசாமி.ஒமலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள மணி – 4600 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரங்கராஜன் கோகன் குமாரமங்கலம் 2681 வாக்குகளும் பெற்றுள்ளனர்.சேலம் மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் 4174 வாக்குகளும், பாமக வேட்பாளர் அருள் 4741 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இரண்டாவது சுற்றில் பாமக வேட்பாளர் அருள் முன்னிலை பெற்றுள்ளார்.சேலம் தெற்கு தொகுதியில் இரண்டாவது சுற்றில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணம் 2493 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் 3516 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக 2397 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. மேட்டூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் பாமக (அதிமுக கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள் 1815 வாக்குகளும், பாமக வேட்பாளர் சதாசிவம் 4586 வாக்குகளும் பெற்றுள்ளார். சேலம் மேட்டூர் தொகுதியில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளது.ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் 1108 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சேலம் சங்ககிரி தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் ராஜேஷ் முன்னிலையில் உள்ளார்.சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 3702 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜேஷ் 4374 வாக்குகளும் பெற்றுள்ளார். 672 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. சேலம் வடக்கு தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் 3268 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் 2205 வாக்குகளையும் பெற்றுள்ளார்.ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ரா 4079 வாக்குகளையும், திமுக வேட்பாலர் தமிழ் செல்வன் 2942 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் 1087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:305:30ஏற்காடு தொகுதியில் அதிமுக முன்னிலைஏற்காடு சட்டமன்ற தொகுதி முதல் சுற்று முடிவுகளில் அதிமுக சித்ரா 4079 வாக்குகளும் திமுக தமிழ் செல்வன் 2942 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் 1087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:295:29புதுச்சேரி தொகுதிகள் முன்னணி நிலவரம்காமராஜர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 3849 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 2132 வாக்குகள் பெற்றுள்ளார்.மாஹே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத் 1285 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிதாசன் மாஸ்டர் 1139 வாக்குகள் பெற்றுள்ளார்.புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிச்சர்ட் ஜான்குமார் 2847 பெற்று இதுவரை முன்னிலையில் இருக்கிறார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் மாஸ்டர் 2651 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:235:23தேர்தல் ஆணையத் தரவுகள் கூறுவது என்ன?தமிழ்நாடு நிலவரம்தேர்தல் ஆணையத் தரவுகளின்படி தமிழ்நாட்டில் 71 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் அதிமுக 30 இடங்களிலும், திமுக 33 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி 3, பாஜக 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:574:57முன்னிலை பெற்றுள்ள கமல், மற்ற தொகுதிகளின் நிலவரம் என்ன?kamalBBCCopyright: BBCதபால் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் முன்னிலை பெற்றுள்ளார்.முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலஹாசனை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமாரும் போட்டியிட்டனர்.இந்த நிலையில், கோவை தெற்கு – தொகுதியின் முதல் சுற்று எண்ணிக்கையில் கமல் 1391 வாக்குகளும் மயூரா ஜெயக்குமார் 1345 வாக்குகளும் பெற்றுள்ளனர்.மேட்டூர் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் 1108 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:364:36எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் முன்னிலைதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.எடப்பாடி சட்டமன்ற தொகுதி முதல் சுற்று விவரம்:எடப்பாடி பழனிசாமி : 5484 திமுக சம்பத்குமார் : 2159.முதல்வர் பழனிசாமி 3325 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி. தினகரன் முன்னிலை வகிக்கிறார்.திருநெல்வேலி தொகுதியில் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார்.சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் முதல் சுற்றில் 1063 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானா, அதிமுக அசோக்கை விட அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:314:31மேற்கு வங்கம், அசாம், கேரள தேர்தல் முடிவுகள்: ஏன் இவ்வளவு ஆர்வம்?MAMTAGetty ImagesCopyright: Getty Imagesதமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெற்று வருகிறது.இதில் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான, சில நேரங்களில் கசப்பான, மோதல் நடந்த மேற்கு வங்க முடிவுகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், மேற்கு வங்கம், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்று என்பதும், அதனால், இயல்பாகவே நாடாளுமன்ற மாநிலங்களவையில் யார் அதிகம் எம்.பி.க்களைப் பெறப் போகிறார்கள் என்பதும் ஆகும்.சில காலம் முன்புவரை பாஜக கால் பதிக்காத ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிடுமா என்ற கேள்வியும் இந்த இந்த ஆர்வத்துக்கு கூடுதல் காரணம்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:284:28தொண்டாமுத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது பரபரப்புதொண்டாமுத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் போது சலசலப்பு ஏற்பட்டது. இன்று காலை 8 மணி வரை பெறப்பட்ட தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் துவங்கியது.கோவை மாவட்டத்தில் பதிவான தபால் ஓட்டுக்களின் மொத்த எண்ணிக்கை 19,029 என தெரிவிக்கப்படுகிறது.கோவையில் தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு , கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை , கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி அரசு தொழிற்நுட்ப பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.தொண்டாமுத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கியபோது, காலை 8 மணிக்கு மேல் பெறப்பட்ட தபால் வாக்குகளை எண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சுமார் 20 நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து முகவர்களை சமாதானம் செய்தார். இதனால் சிறிது நேரம் தபால் வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்தது. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் இரு மேஜைகள் என மொத்தம் 20 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் 9 தொகுதிக்கு தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகளும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 24 மேஜைகளில் வாக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணப்படும் சுற்றுகள் 21 முதல் அதிகபட்சம் 36 சுற்றுகள் வரை திட்டமிடப்பட்டுள்ளது.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:184:18விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை விவரங்கள்விருதுநகர் மாவட்ட 7 சட்டமன்ற தொகுதிகள் தபால் வாக்குகள் எண்ணிக்கை விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் நடைபெற்று வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சாத்தூர் , சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி ), ராஜபாளையம்,ஆகிய 7 தொகுதிகள் உள்ளன . விருதுநகர் மாவட்டம் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளுக்கான விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரியிலும் மற்றும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீவித்யா கலைக்கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது.8 மணிக்கு தபால் வாக்குகளும் ,அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ண துவங்கின. வாக்குகளை எண்ணஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளது.தபால் வாக்குகள் எண்ணப்பட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:094:09புதுவையில்  வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?hhBBCCopyright: BBCபுதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கான வாக்குகள் 6 மையங்களில் எண்ணப்படுகிறது.இதில் புதுச்சேரியில் மூன்று மையங்கள், காரைக்கால், மாஹே ஏனாம் தலா ஒரு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி, மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது.இதேபோல் காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளுக்கு அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் வாக்குகள் எண்ணப்படுகிறது. முதல்கட்டமாகத் தபால் வாக்கு எண்ணப்படுகிறது. 80 வயது, மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பத்திரிகையாளர் என 17,148 தபால் வாக்குகள் இதுவரை பதிவாகி உள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 166 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 324 வேட்பாளர்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளையும் மூன்றாகப் பிரித்து, மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.முதல் கட்டமாக 12 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 10 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக 8 தொகுதிகளும் எண்ணப்படுகிறது.இதில் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள தொகுதிகளுக்கு 4 முதல் 5 சுற்றுகள் வரை எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை வரும் முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 3:533:53நெல்லை மாவட்ட  வாக்கு எண்ணிக்கை நிலவரம்tirunelveliBBCCopyright: BBCநெல்லை மாவட்டத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மொத்த தபால் வாக்குகள் 14,226. நெல்லை – 2618அம்பாசமுத்திரம் – 2127பாளையங்கோட்டை – 3521நாங்குநேரி – 2706ராதாபுரம் – 3254
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 3:503:50சென்னை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலை என்ன?:சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நான்கு தொகுதிகளான ஆர்.கே.நகர், துறைமுகம், ராயபுரம், திரு.வி.க நகர் தொகுதிகளுக்கான தபால் வாக்கு எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • பிரசுரிக்கப்பட்ட நேரம் 3:443:44தொடங்கியது வாக்கு எண்ணிக்கைதமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுவையில் 30 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-தேதியன்று நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று (மே 2-ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது.தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இவை எண்ணப்பட்டு முடிந்தவுடன், இவிஎம் எந்திர வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இந்த முறை ஒவ்வொரு சுற்றுக்கும் சற்று கூடுதல் நேரம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Article share tools
      • Thanks BBC Tamil

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More