150
சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி பணிபுரியவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகின்ற நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் .
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான மாஸ்டர் செப் எனும் சமையல் நிகழ்ச்சியின் இந்தியாவில் அறிமுகம் செய்யும் சன் டிவி அதற்கான புரோமோவை வெளியிட்டுள்ளது.
விரைவில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love