குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதிமன்றின் தீர்ப்பிற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டுமென மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டக் கற்கை நெறி சட்ட ரீதியானது என அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிப்பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் சவால்கள் தடைகளைக் கண்டு தாம் தயங்கவில்லை எனவும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்ட நியதிகளை மதித்து அதன் அடிப்படையில் தமது பல்கலைக்கழகம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.