பிபிசியுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதிப்படைந்து அவருக்கும் தமது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசியின் தரம் தாழ்ந்த செயல் விசாரணையில் உறுதியானதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது கூட தனது தாய்க்குத் தெரியாது என்பது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாகவும் கூறியுள்ள வில்லியம் தனது தாய் ஒரு முரட்டு செய்தியாளரால் மட்டுமல்லாமல், பிபிசி உயரதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டதாக தொிவித்துள்ளாா்.
அதேவேளை தனது தாயின் மரணத்திற்கு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் என இளவரசர் ஹாி தெரிவித்துள்ளார்.
அவா் தனது தனது தனி அறிக்கையில், சுரண்டல் கலாச்சாரத்தின் விளைவுகள் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகள் தனது தாயின் உயிரைப் பறித்துவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற நடைமுறைகள் இன்றும் பரவலாக உள்ளன என்று கவலை தெரிவித்த அவர், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனம், வலையமைப்பு மட்டுமல்லாது அதையும் தாண்டியது எனவும் இதன் காரணமாகவே தங்கள் தாய் தனது உயிரை இழந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் இதுவரை எதுவும் மாறவில்லை, அவரது மரபைப் பாதுகாப்பதன் மூலம், நாம் அனைவரையும் பாதுகாக்கிறோம், மேலும் அவர் வாழ்ந்த வாழ்வின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துகிறோம் என இளவரசர் ஹாி தெரிவித்துள்ளார்.
அதேவேளை வேல்ஸ் இளவரசி டயானா பிபிசியுடனான ஒரு நேர்காணலில் ஆர்வமாக இருந்தார் என அறிக்கை கூறினாலும், நேர்காணல் அனுமதியைப் பெறப் பயன்படுத்தப்பட்ட செயல்முறை மிகவும் தரம் தாழ்ந்தது எனவும் அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம் எனவும் பிபிசியின் தற்போதைய இயக்குனா் ஜெனரல் டிம் டேவி தொிவித்துள்ளாா்.
நடந்தது என்ன என்பதனை அறிய பிபிசி, அதிக முயற்சி செய்திருக்க வேண்டும் எனவும் தான் அறிந்ததை வெளிப்படையாகத் தெரிவித்திருக்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இளவரசர் சார்லஸுக்கு டேவி அனுப்பிய கடிதத்தில், இளவரசர், அவரது ஊழியர்கள் மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் குறித்து பஷீரின் மோசமான மற்றும் பொய்யான கூற்றுகளுக்கு அவா் மன்னிப்பு கோாியுள்ளாா்.
இளவரசியின் அச்சத்தைத் தூண்டி, தன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த விரும்பி, தான் தீங்கு விளைவித்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் பிபிசி ஊடகவியலாளா் பஷீர் கூறிய கருத்துகள் தவறானவை என்பதை பிபிசி ஏற்றுக்கொள்கிறது என அவா் தனது கடிதத்தில் தொிவித்துள்ளாா்.
லார்ட் டைசனின் அறிக்கை வெளியான சற்று நேரத்திலேயே, ஒரு வாரமாக ஒத்திப்போடப்பட்டு வந்த நேர்காணல் குறித்த பனோரமா விசாரணை வியாழக்கிழமை மாலை பிபிசி ஒன்லைனில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
தன்னை இளவரசிக்கு அறிமுகப்படுத்த அவரது சகோதரரான ஏர்ல் ஸ்பென்சரிடம், இளவரசியைக் கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக அரச குடும்பம் தனி நபர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக சித்தரிக்கும் போலி வங்கி அறிக்கைகளை பிபிசி ஊடகவியலாளா் மாா்டின் பஷீர் (Martin Bashir) காட்டி ஏமாற்றியதை லோர்ட் டைசன் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளாா்
நேர்காணல் அனுமதி எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளை ஏர்ல் ஸ்பென்சர் பகிரங்கமாகக் கூறியதை அடுத்து, கடந்த ஆண்டு பிபிசியால் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டது
ஆவணங்களைப் போலியாகப் பயன்படுத்தியது ஒரு முட்டாள்தனமான விஷயம் என்றுஒப்புக்கொண்டு அதற்கு வருத்தமும் தெரிவித்த பஷீர் நேர்காணலுக்கான டயானாவின் முடிவில் அந்த ஆவணங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் தொிவித்துள்ளாா்.
முதன்முறையாக, ஒளிபரப்பு குறித்துத் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் பஷீர் தன்னிடம் போலி ஆவணங்களைக் காட்டவில்லை என்றும் டயானா எழுதிய ஒரு குறிப்பு வெளியாகியிருந்தது . இது பஷீருக்குச் சாதகமான ஆதாரமாக பிபிசியால் பயன்படுத்தப்பட்டது.
58 வயதான பஷீர், இங்கிலாந்தின் பிரபலமான ஊடகவியலாளர். 2003-ல் பாபொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடனான நேர்காணலால் மிகப் பிரபலம் அடைந்தவர்.
தனது உடல் நலக் குறைவு காரணத்தைக் காட்டி, கடந்த வாரம் அவர் பிபிசி-யிலிருந்து விலகினார். 2016-ல் இருந்து அந்நிறுவனத்தின் மதச் செய்தியாளராகவும் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மூலம் பிபிசிதமிழ்