Home இலங்கைஇரு வாரங்களில் தொற்றாளர் எண்ணிக்கை குறையும்

இரு வாரங்களில் தொற்றாளர் எண்ணிக்கை குறையும்

by admin

நாட்டில் கடந்த சில வாரங்களாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் எதிா்வரும் ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால், பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு தொற்று பரவுதல் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் தொிவித்துள்ளார்.

எனினும், முழுமையான பயனைப் பெறுவதற்கு சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More