173
பாரிஸ் நகர குடியிருப்பு பகுதி ஒன்றில் இறந்த தாயின் உடலை நீண்ட காலம் மறைத்து வைத்திருந்த மகன் ஒருவரை காவல்துறையினா் கைதுசெய்திருக்கின்றனர். பெரிய பெட்டி ஒன்றில் பதப்படுத்தப் பட்டது போன்ற நிலையில் தாயாரது சடலத்தின் எச்சங்களையும் காவல்துறையினா் மீட்டிருக்கின்றனர்.
‘பரிஷியன்’ பத்திரிகையில் வெளியாகி உள்ள விவரங்களின்படி 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இந்தச்செயலைப் புரிந்துள்ளார். பாரிஸ் 20 ஆம் நிர்வாகப் பிரிவில் வசிக்கின்ற அவர் கடந்த செவ்வாயன்று அங்குள்ள காவல்நிலையத்துக்குச் சென்று தனது தாயாரது சடலத்தை ஒளித்து வைத்திருக்கும் தகவலை அவரே நேரடியாக காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டார்.தனது தாயார் 2014 ஆம் ஆண்டில் 75 வயதில் உயிரிழந்தார் என்ற தகவலை அந்த நபர் காவல்துறையினரிடம் வெளியிட்டுள்ளார்.
தாயாருக்குக் கிடைத்துவந்த அரச ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே அவரது மரணத்தை மறைத்ததுடன் சடலத்தையும் ஒளித்து வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலை மற்றும் சடலத்தை மறைத்தமை என்ற கோணத்தில் பாரிஸ் அரச சட்டவா ளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சடலத்தின் பூர்வாங்கப் பரிசோதனைகள் கொலைக் குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை நிரூபிக்கவில்லை
(படம் :சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த
மாடிக் குடியிருப்பு. பரிஷியன் செய்திச்
சேவை.)
.
—————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.
Spread the love