இந்தியாவின் மும்பை புறநகர்ப் பகுதியில் இன்று பொது கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். மும்பை புறநகர்ப் பகுதியான மன்கார்டில் உள்ள குடிசைப்பகுதியான இந்திரா நகரில் உள்ள பொது கழிப்பிடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
மகாராஷ்டிர வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையம் பராமரித்து வருகின்ற இந்த கழிப்பிடம் மிகவும் பழமையான கட்டிடம் எனவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டிடம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.