சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கம் ஊடாக இலங்கை சென்ற நபா் ஒருவர் முள்ளியவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு சென்ற குறித்த நபா் அங்கு நாகபட்டிணம் பகுதியில் வாழ்ந்துள்ளாா் எனவும் கடந்த மார்ச் 12 ஆம் திகதி கடல் மார்க்கமாக ஊடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் தற்போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.