வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சியின் தலைவராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருக்கும் உதய கம்மன்பிலவை இந்த நேரத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவராகவே பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பொதுஜனபெரமுனவோடு முரண்படும் ஆளும் பங்காளிக் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு ஐக்கியமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.