Home பிரதான செய்திகள்டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது

டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது

by admin

ஐசிசியினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் தொடரில் இந்தியா அணியை வென்று நியுசிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்ஹம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. போட்டியின் போது தொடர்ச்சியாக மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 6 ஆவது நாளாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் போட்டியின் இறுதி நாளான நேற்று நியுசிலாந்து அணிக்கு 139 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தினைக் கைப்பற்றியது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More