அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே மியாமி பகுதியில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் 102 பேரை மீட்டுள்ளதாகவும் 99 பேரைக் காணவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
கட்டட இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது சில லத்தின்அமெரிக்க குடியேறிகளும் காணாமல் போயுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் பராகுவே நாட்டு ஜனாதிபதியின் மனைவியின் சகோதரி மற்றும் அவரின் குடும்பமும் இந்த இடிபாடிகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.