Home இலங்கைநபர் ஒருவர் கடத்தப்பட்டார் – இராணுவ சிா்பாய்கள் கைது!

நபர் ஒருவர் கடத்தப்பட்டார் – இராணுவ சிா்பாய்கள் கைது!

by admin

நுரைச்சோலைப் பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கப்டன் ஒருவர் உள்ளிட்ட 4 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, நுரைச்சோலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் நுரைச்சோலை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் நால்வரும் கல்லாறு இராணுவ முகாமுக்கு இணைவாக கடமையாற்றுபவர்கள் என்றும், இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், காவற்துறையின் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More