Home இலங்கைவவுனியாவில் வெட்டுக் காயங்களுடன், சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் வெட்டுக் காயங்களுடன், சிறுவன் சடலமாக மீட்பு!

by admin
File Photo

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06.07.21) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அயலவர்கள் காவற்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவற்துறையினர் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் காவற்துறையினரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More