Home இலங்கைசிறுமி விற்பனை -கைதாகும் முக்கிய புள்ளிகள்

சிறுமி விற்பனை -கைதாகும் முக்கிய புள்ளிகள்

by admin

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் , மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், பிரபல வர்த்தகர் ஒருவர், மதகுரு ஒருவர், கப்பல் கப்டன் மற்றும் கப்டனின் உதவியாளர் ,சிறுமியின் தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More