உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் உயிாிழப்பதாக சா்வதே வறுமைக் கண்காணிப்பு அமைப்பான ஒக்ஸ்பாம் ( Oxfam ) நடத்திய ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் அதனால் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் அண்மையில் ஒக்ஸ்பாம் நடத்திய ஆய்வில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்துள்ளதாக தொியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஏராளமானவா்கள் உயிரிழந்து வருகிற போதிலும் பட்டினியால் ஏற்படும்உயிரிழப்புகள் அதன் வேகத்தை விஞ்சி வருவதாகவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் நிமி்டத்துக்கு 11 போ் உயிாிழக்கின்றனா் எனவும் தொிய வந்துள்ளது.
சா்வதேச அளவில் 15.5 கோடி போ் தற்போது கடும் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனா் எனவும் இது, முந்தைய ஆண்டைவிட 2 கோடி அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் 10 பணக்காரர்களின் செல்வம் கடந்த ஆண்டு மட்டும் 41,300 கோடி அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள குறித்த ஆய்வு தொற்றுநோய் பரவல், காலநிலை மாற்றம் ஆகிய காரணிகளால் உணவின்மை சிக்கல் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப்பொருட்களின் விலை 40% அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பது சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், ராணுவச் செலவுகளுக்காக உலக நாடுகள் 5,100 கோடி டொலா்களை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த ஆய்வு இது, உலகில் பசிப் பிணியைப் போக்குவதற்குத் தேவையான தொகையைவிட 6 மடங்கு அதிகமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது