தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
சொவேட்டோ எனும் நகரில் கடைகள் சூறையாடப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் வன்முறையைத் தூண்டியதாக 12 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க காவல்துறை இதுவரை 1,234 பேரை கைது செய்துள்ளதாகவும் தொிவித்துள்ளது.
1990-களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோஸா கூறியுள்ளார்.
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவா் கைது செய்யப்பட்டு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது