Home இலங்கை ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

by admin

நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில்  பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இன்று (16) தெரிவித்துள்ளார். 

கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில்  பணிபுரிந்த  நுவரெலியா டயகம பகுதியை சேர்ந்த 16 வயது 8 மாதங்கள் வயதான சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் , நேற்று  (15) உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்ததாக தொிவித்த காவல்துறை பேச்சாளர் இந்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More