Home இலங்கையாழில். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

யாழில். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

by admin

சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த தோட்ட கிணற்றில் சடலம் காணப்படுவதாக சுன்னாகம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். 


சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினா் ம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More