Home இலங்கைடயகம சிறுமியின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

டயகம சிறுமியின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

by admin

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்து   டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் உடல் இன்று (30) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி  முன்னிலையில் மூன்று சட்ட வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் அவரது உடல் தோண்டி எடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக காவல்துறைப் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More