அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா புஷ்பா அளித்த முறைப்பாட்டுக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது அழைப்பாணை இல்லை என்பதால், விளக்கம் அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மேல்-சபை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும் தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோதமான நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்தினைத் தொடர்ந்தே தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.