இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு ஒரு வருடம் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் குறித்த மூன்று வீரர்களும், குமிழி பாதுகாப்பை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டுத் தொடா்லேயே இவ்வாறு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது
அத்துடன் குறித்த 3 வீரர்களுக்கும் தலா 37 லட்சம் ரூபா அபராதமும், உள்நாட்டுப் போட்டிகளில் 6 மாதங்கள் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை அமைத்திருந்த ஆணையகம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில், குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க தலா 2 ஆண்டு தடையும், நிரோஷன் திக்வெல்லவுக்கு 18 மாதங்கள் தடையும் விதித்து பரிந்துரை செய்திருந்தது
இந்தநிலையிலேயே இலங்கை கிாிக்கெட் சபை 2 ஆண்டுகள் தடையை 3 வீரர்களுக்கும் ஓர் ஆண்டு சர்வதேச தடையாகவும், 6 மாதங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தடையாகவும் மாற்றி அறிவித்துள்ளது.
இந்தத் தடையால் குறித்த 3 வீரர்களும் ஐக்கியஅரபு அமீரகத்தில் நடக்கும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க முடியாது என்பது கறிப்பிடத்தக்கது