கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளமை தொடா்பில் சட்ட வைத்திய அதிகாரியும் தடயவியல் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனையடுத்து அப்பகுதியில் உள்ள அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என்பதனால் அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் இன்று அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.