கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் என்ற வகையில் , கொரோனா பரவலுக்கு தீர்வு காண, பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தயாராகி வருவதாகவும் அந்த செய்தியில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளதுடன் வெளிவிவகாரம், கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளிலும் வெகு விரைவில் பல மாற்றங்கள் ஏற்படுமெனவும் தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது