மட்டக்களப்பு- காராமுனை பகுதியில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதியின் வனத்தில் மரங்களை வெட்டி தீயிட்டு, சுமார் 8 ஏக்கர் பகுதி அழிக்கப்பட்டு, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வாகனேரி வனப்பகுதியிலுள்ள காரமுனை கிராமத்துக்கு முன்னால் உள்ள இந்த காட்டை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனம்தெரியாத சிலர் ஊடுருவி, அங்கிருக்கும் பழமைவாய்ந்த மரங்களை வெட்டி, விழ்த்தி தீயிட்டு எரித்துள்ளனர். இதனால் ஏறத்தாள 8 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காடழிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டுப்பிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை உரிய அதிகாரிகள் முன்னெக்க வேண்டுமென அப்பகுதி வாழ் பொதுமக்கள் சம்பந்தப்பட்டோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.