Home இலங்கைகொமர்ஷல் வங்கியின் யாழ். பிரதான கிளையில் 12 பேருக்கு கொரோனோ!

கொமர்ஷல் வங்கியின் யாழ். பிரதான கிளையில் 12 பேருக்கு கொரோனோ!

by admin

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அங்கு பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையை தற்காலிக மூட மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More