Home பிரதான செய்திகள்செரீனா அமெரிக்க ஓபனிலிருந்து விலகியுள்ளாா்

செரீனா அமெரிக்க ஓபனிலிருந்து விலகியுள்ளாா்

by admin

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 39). இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுவதாக செரீனா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ‘உடல்நிலையை கவனமாக பரிசீலித்து, தனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்பேரில், தொடை தசைநார் கிழிவில் இருந்து முழுமையாக குணமடைவதற்காக அமெரிக்க ஓபனில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 23 முறை சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் எனடபது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More