இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தனிப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் எதிா்வரும் ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பின்னா் நீட்டிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். எனினும் பலரின் பரிந்துரைகளை பரிசீலித்த பின்னரே முடிவு எடுக்கப்படுமெனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடு முடக்கத்துடன் முன்னேறுவது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவா் நாட்டை முடக்குவதன் மூலம் எந்தவொரு நாடும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான தனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த சில நாட்களில் நாட்டில் 4000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் நாளொன்றுக்கு குறைந்தது 200 இறப்புகளும் இடம்பெற்ற நிலையிலேயே நாடு தழுவிய முடக்கம் 10 நாட்களுக்குக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க வேண்டுமென அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.