Home இலங்கைமந்திகையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொரோனோவால் உயிரிழப்பு!

மந்திகையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொரோனோவால் உயிரிழப்பு!

by admin

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர், இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரும் கம்பர்மலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில், நேற்று மாத்திரம் புதிதாக 163 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கிடையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மூவர் உட்பட ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிழந்தனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More