குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதி மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
குறித்த அணுகு வசதி வழியானது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும், அதன் சரிவு தன்மையானது சக்கர நாற்காலிக்குரிய வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அத்தோடு பொதுக் கட்டடங்களில் அணுகு வசதி அமைக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பெரும்பாலான இடங்களில் அவை நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்றும், இதனால் தங்களின் சுந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனா்.
சில பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் மேல் மிகவும் அக்கறை செலுத்தி அணுகும் வசதிகள் மாபிள்கள் பதித்து அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வழியை தங்களால் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது என்றும் அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.