– நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என கோரியுள்ளது.
ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதோடு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கின்றது.
வலிந்து காணாமலாக்கலுக்கு இரையானவர்களை ஆவணமாக்கும் நோக்கில் 2018ம் ஆண்டு ‘உங்களை நாங்கள் மறவோம்’ எனும் http://youarenotforgotten.org/about-us/. இணையத்தளம் ஒன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
https://www.einpresswire.com/article/550063681/disappeared-with-intent-to-destroy-enforced-disappearances-strategic-part-of-eelam-tamil-genocide-tgte
இன்று, 2021 ஓகஸ்ற் 30ம் நாள் – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள்.
இலங்கைதீவில் கடந்த பத்தாண்டு முன்பு சிறிலங்கா அரசுப் படைகளால் கடத்திச் செல்லப்பட்ட, சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தேடியலையும் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்க, குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
2009 மே, இறுதிப்போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து கொண்டு செல்லப்பட்டு காணாமற்போன தமிழர்கள் இன்று வரை கணக்கெடுக்கப்படவே இல்லை. கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறிலங்காவின் இரகசிய தடுப்புக்களில் கடும் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுகு;கும் உள்ளாகி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ‘காணாமற்போனவர்கள்’ பெரும்பாலும் தமிழ் இளம் யுவதிகளே பெரும்பாலனவர்கள். இவர்களில் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் என்ற கத்தோலிகக் குருவும் ஒருவரும் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரமொன்றின் படி வலிந்தோ தன்விருப்பமின்றியோ காணாமலாக்கும் செயல்களில் சிறிலங்காவே உலகில் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
வலிந்து காணாமலாக்கிய செயல்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா படைத் தளபதிகளையும், அரசியல் தலைவர்களையும் கூண்டிலேற்றாவது பாதுகாத்துக் கொள்வதிலேயே போருக்குப் பிந்திய ஆட்சியாளர்களுக்கு கவனமாக இருந்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசின் அணுகுமுறையானது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தன் இனவழிப்புச் செயல்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறுவதில் அதற்குள்ள அலட்சியத்தையே அனைத்து வகையிலும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆகவே, வலிந்து காணாமலாக்கிய குற்றங்கள் உள்ளிட்ட இனவழிப்புச் செயல்கள் குறித்தும் மானிட விரோதக் குற்றங்கள் குறித்தும் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, குற்றவாளிகள் அனைத்துலக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கையாகும்.
சிறிலங்கா அரச நிறுவனங்களிலும் அரசியல் தளத்திலும் இனநாயகம் ஊன்றிப் படர்ந்து ஊடாடி நிற்கும் நிலையில், அவற்றால் வலிந்து காணாமலாக்கிய குற்றங்களால் துயரப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது வெள்ளிடைமலை.
2009ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்த மகிந்த இராசபட்ச அரசாங்கமானது, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான அனைத்து புலனாய்வு விசாரணை முயற்சிகளையும் எதிர்த்து நின்றது. தொடர்ந்து ஆட்சிக்கு மைத்திரிபால சிறிசேனா, காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களையும் மனைவிமார்ளையும் சந்தித்தார். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனிப்பதாக உறுதியும் அளித்தார். ஆனால் ஒன்றுமே செய்யல்லை. அடுத்துவந்த அதிபர் கோட்டபய இராஜபட்ச காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள் என்றாரே தவிர, நீதி அதற்கான பொறுப்புக்கூறலுக்கு வழிசொல்லவில்லை. இறுதியில் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் சிறிலங்கா தொடர்பான தீர்மானித்திலிருந்தும்விலகிக் கொண்டார். அதாவது சிறிலங்கா அரசே தமிழர்களுக்கு நீதி மறுத்துள்ளது.
இத்தனை ஆண்டுகளும் சிறிலங்காவின் தலைவர்கள்
(அ) சட்டச் செயல்வழிகளை மறித்துள்ளார்கள்
(ஆ) தாங்கள் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை மீறியுள்ளார்கள்
(இ) காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றிய செயற்பாட்டாளர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்கள்
(உ) குற்றவாளிகளைக் குற்றவிளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டே பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிடுவதன் மூலம் வலிந்து காணாமலாக்கும் செயல்களை ஒழிக்கப் பாடுபடுவது போல் நாடகமாடியுள்ளார்கள்.
2015 செப்டெம்பரில் அப்போதிருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவையூடாக அனைத்துலக கமூகம் கொண்டுவந்த நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளைச் செயலாக்க ஒப்புக்கொண்டிருந்தது. காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொணர புலனாய்வு செய்யும் வழிவகைகளைச் செயலாக்கத் தொடங்குவதாக சிறிலங்கா அரசு கூறிய போதிலும் அது நிறுவிய கருவிகளிலிருந்து காணாமலாக்கப்பட்டுப் பிழைத்து மீண்டு வந்தவர்களின் தேவைகளைச் செய்து கொடுக்காமல் பன்னாட்டு சமுதாயத்தைக் குளிர்விப்பதில் மட்டுமே அது அக்கறை கொண்டிருப்பது தெரிந்து விட்டது. அது வெறும் பொய்மையே என்று தெரிந்து விட்டது.
ஐ.நாவின் 30-1 தீர்மானத்தை ஒட்டிப் அனைத்துலக வல்லுநர்களைக் கொண்டு காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தை கேலிசெய்து பழிப்புக் காட்டுவது போல் உள்நாட்டுச் செயற்பாட்டாளர்களைக் கொண்டு மட்டும் காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றை அமைத்தது. சிறிலங்கா அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாத அனைத்துலக அரசுகள், தமது புவிசார் அரசியல் காரணங்களால் இந்த ஏற்பாட்டை அணைத்துக் கொண்டன என்பது வருத்தத்திற்குரியது
காணாமாலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் காணாமற்போனோர் அலுவலகத்திடம் கூறியது என்னவென்றால், உள்நாட்டுப் போரின் முடிவில் சிறிலங்கப் படையிடம் சரணடைந்து காணாமற்போனவர்களில் ஐந்தே ஐந்து பேர் என்னவானார்கள் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நாங்கள் உங்களை நம்பி இணைந்து பாடுபட அணியமாய் உள்ளோம் என்பதே. ஆனால் இதைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. இந்த அலுவலகம் தன் ஐந்தாண்டுக்கால வாழ்வில் காணாமற்போன சிலரின் பெயர்களை வெளியிட்டதற்கு மேல், தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட நிகழ்வுகளை கருத்தூன்றிப் புலனாய்வு செய்யவே இல்லை.
சிறிலங்காவின் இப்போதைய அதிபர் கோட்டபய இராஜபக்ச அண்மையில் வழங்கிய நியமனங்கள், காணாமற்போனோர் அலுவலகத்தின் தற்சார்பை மேலும் சீர்குலைத்துள்ளன. இவ்வாறு அமர்த்தப்பட்டிருப்பவர்களில் ஒருவர் செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்கா கொலையில் சாட்சியத்தை அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறைக் காவலர் ஜெயந்த விக்ரமரத்னா ஆகும். இன்னொருவர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களை விடுவிக்க முற்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபயரத்னா.
முந்தைய ஆட்சியில் தொடுக்கப்பெற்ற சில குற்ற வழக்காடல்களையும் கோட்டபய இராஜபக்ச முடக்க முற்பட்டுள்ளார். இந்த மாதம் முற்பகுதியில் 2008, 2009 ஆண்டுகளில் பெரியோரும் சிறாருமான 11 பேர் காணாமலாக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தலைமை அரசுச் சட்டத்தரணி கைவிட்டுக் கொண்டார்.
முல்லைத்தீவு நீதியர்களின் வழக்கு மன்றங்களில் துணிச்சலான குடும்பங்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்குகளை மையப்படுத்தியே சட்டச் செயல்வழிகள் அமைந்துள்ளன.
முறைப்பாட்டாளர்களில் பெரும்பாலார் 2009 மே மாதம் இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்திடம் தமது அன்புக்குரியவர்களை விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் ஒப்படைக்கட்டவர்களாகும். ஆனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.
சிறிலங்கப் படையின் சட்டத்தரணிகள் இறுதியில் நீதிமன்றத்துக்கு வர இணங்கிய போது முறைப்பாட்டாளர்களுக்காக முன்னின்ற சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணையின் ஊடாக 2009 மே மாதம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் பட்டியல் அவர்களிடம் இருப்பதை வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளி விட்டார்கள். அதாவது அந்தப் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று பொருள். ஆனால் சிறிலங்கப் படை பட்டியல் தர வேண்டும் என்று நீதியர் ஆணையிட்ட போதிலும் சிறிலங்கப்படை முட்டுக் கட்டை இட்டதால் வழக்கு முடங்கி விட்டது.
காணாமலாக்கும் குற்றங்கள் எளிதில் நடைபெறத் துணை செய்த கருவிகளில் ஒன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இந்தச் சட்டத்தை நீக்கம் செய்யும்படி தமிழர்களும் உள்நாட்டு, பன்னாட்டு மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும், அனைத்துலக அரசுகளும் கோரியுள்ள போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
வலிந்து காணாமலாக்கலுக்கு இரையானவர்களை ஆவணமாக்கும் நோக்கில் ‘உங்களை நாங்கள் மறவோம்’ http://youarenotforgotten.org/about-us/. எனும் இணையத்தளத்தினை 2018ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது. இந்த இணையத்தளத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவர்கள் பற்றிய தகவல்களை இந்த இணையத்தில் ஆவணப்படுத்த வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Today, 30 August 2021, marks another International Day of the Disappeared, but justice still eludes thousands of Eelam Tamil families in Sri Lanka searching for beloved ones who were kidnapped by government forces over a decade ago.
Till today there has been no accounting of the missing Tamils who were forcibly taken away by the Sri Lankan army at the end of the civil war in May 2009 and who are feared to have been tortured and killed in custody. Those ‘disappeared’ include mostly Tamil youth and even a Roman Catholic priest Rev. Francis Joseph.
Sri Lanka has the world’s second-highest number of cases registered with the United Nations Working Group on Enforced or Involuntary Disappearances.
Despite international calls for an impartial investigation all three post-civil war regimes in Sri Lanka have blocked any attempt to bring the country’s military and political leaders responsible for enforced disappearances throughout the war to book.
In the view of the Transnational Government of Tamil Eelam (TGTE) the Sri Lankan State’s treatment of the disappeared bears all the hallmarks of indifference to accounting for its acts of genocide against Eelam Tamils and crimes against humanity.
The TGTE therefore calls for an international investigation into acts of genocide and crimes against humanity, including enforced disappearances, and that perpetrators be brought before the International Criminal Court (ICC).
Clearly, the Sri Lankan State institutions and the polity which are permeated by entrenched and pervasive racism is unable to mete out justice for the Tamil victims of Enforced Disappearance.
The Mahinda Rajapaksa government that was in power in 2009 resisted all efforts to investigate the disappearances. His successor President Maithripala Sirisena met with mothers and wives of the disappeared and agreed to address disappearances but did nothing.
The next President Gotabaya Rajapaksa said all the disappeared were dead but offered no recourse to justice or accountability. Finally, Rajapaksa also pulled out of implementing UNHRC Resolution 30/1. In short the Sri Lanka state itself denied justice for Tamils.
Over the years Sri Lanka’s leaders have:
a) blocked legal processes.
b) violated transitional justice mechanisms they agreed to pursue, c) threatened and intimidated activists working with the families of the disappeared.
d) displayed a façade of working towards eliminating enforced disappearances by signing international instruments, while protecting perpetrators from the consequences.
In September 2015 the then Sri Lanka Government had agreed to implement transitional justice mechanisms that the international community adopted through the UNHRC. That proved mere hypocrisy. Although the Sri Lankan state said it would begin implementing provisions to investigate the truth about disappearances, the instruments it established showed it was only interested in satisfying the international community, and not meeting the requirements of the survivors.
The victims and the international community expected that pursuant Res. 30/1 the Office of Missing Persons ( OMP) will be established comprising international experts. However the Sri Lankan state thumbed its nose at the international community and established an OMP
comprised of only domestic actors. Sadly the international powers unwilling to antagonize the state of Sri Lanka, due to geopolitical reasons, embraced it.
Notwithstanding the protests by families of the disappeared the OMP was set up. The Association of the Relatives of the Disappeared (ARED) told OMP it was willing to work with it in good faith if it could trace the whereabouts of five missing persons who had surrendered to the SLA at the end of the civil war. But even that it could not do. And in the five years of its existence, other than publishing the names of some of the disappeared, it did not seriously investigate Tamil disappearances.
Incumbent President Gotabayaa Rajapaksa’s recent appointments to the office, have further undermined the OMP’s independence. They include Jayantha Wickramaratne, a former policeman accused of destroying evidence in the murder of journalist Lasantha Wickrematunge, and Upali Abeyrathne, who led last year’s commission seeking to exonerate alleged perpetrators.
Gotabaya Rajapaksa has also sought to block the few criminal proceedings that were initiated under the previous government. Earlier this month, the attorney general dropped charges against former navy commander Wasantha Karannagoda in connection with the disappearance of 11 men and boys in 2008 and 2009.
The legal processes have centred around the habeas corpus cases filed by courageous families of the disappeared in the Mullaitivu magistrate’s courts. Most of the plaintiffs had surrendered their loved ones to the Sri Lanka Army (SLA) in May 2009 as the fighting in the civil war was winding down. They believed they were handing over their loved ones into the safe custody of a legally constituted body – the SLA – and hence they would be protected. But their loved ones disappeared.
When SLA’s lawyers eventually agreed to come to court, lawyers appearing for the plaintiffs through cross-examination forced the SLA to admit they had lists of those who surrendered to the military in May 2009. This meant that those whose names were in the lists had to be produced in court. But proceedings stalled when despite the order of the magistrate that the SLA submit the list, the SLA has stonewalled.
One of the instruments that facilitated disappearances was the prevention of terrorism act (PTA). Despite Tamil survivors and local and international human rights activists and governments – most recently the EU’s statement – urging the government to rescind the law it has not done so.
In 2018 the TGTE launched the “You Are Not Forgotten Project”. The focus of the project is documenting and memorializing the victims of enforced disappearances. We call upon the relatives of the victims to send information required to be mentioned on the list. The website for this project is http://youarenotforgotten.org/about-us/.