Home இலங்கைவடமராட்சியில் கொரோனோவால் இருவர் மரணம்

வடமராட்சியில் கொரோனோவால் இருவர் மரணம்

by admin

வடமராட்சியில் இன்று முதியவர்கள் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 241ஆக உயர்வடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More