Home இலங்கையாழில் வீட்டில் உயிரிழந்த நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனோ!

யாழில் வீட்டில் உயிரிழந்த நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனோ!

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக உயர்வடைந்துள்ளது.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More