தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் மகனும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள நினைவிடத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதன் போது , தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கம் மற்றும் கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மு. ஆலாலசுந்தரம் ஆகிய இருவரும் கடந்த 1985ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.