Home இலங்கைமின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

by admin

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.  அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியான  அப்பகுதியை சேர்ந்த தியாகராசா மதனபாதம் (வயது 40) என்பவர் உயிரிழந்திருந்தார். 


இந்நிலையில் இன்றைய தினம்  அச்சுவேலி முழங்கன் இந்து மயானத்தில் சடலம் தகனம் செய்யப்பட்டது.  அதன் போது, அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கூடி அஞ்சலி செலுத்தி மயானம் வரை அவரது உடலுடன் ஊர்வலமாக சென்று சடலத்தை தகனம் செய்தனர். 
அதேவேளை அவரது இறுதி ஊர்வலத்தில் அவர் ஒட்டிய பேருந்தையும் அவரது நண்பர்கள் ஓட்டி வந்தனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More