Home பிரதான செய்திகள்ஆப்கானிஸ்தான் கிாிக்கெட் அணியின் தலைவா் பதவி விலகியுள்ளாா்.

ஆப்கானிஸ்தான் கிாிக்கெட் அணியின் தலைவா் பதவி விலகியுள்ளாா்.

by admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிா்வரும் ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி முதல் நவம்பர் 14-ம் திகதி நடைபெற உள்ள இருபதுக்கு இருபது உலக் கிண்ண தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.


அந்த வகையில், இருபதுக்கு இருபதுஉலக்கிண்ண தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அணித்தலைவராக ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில், இரண்டு மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இருபதுக்கு இருபது உலக்கிண்ண தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் கிாிக்கெட் அணியின் தலைவா் ரஷித் கான் பதவி விலகியுள்ளாா்.


உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும்போது அணித்தலைவாட என்ற முறையில் தேர்வுக் குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அணித்தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.


ரஷித் கான் பதவிவிலகியதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More