Home இலங்கைவன்முறை கும்பல் அட்டகாசம் – அச்சுவேலி காவல்துறையினா் அசண்டையீனம் – DIGயிடம் முறையீடு

வன்முறை கும்பல் அட்டகாசம் – அச்சுவேலி காவல்துறையினா் அசண்டையீனம் – DIGயிடம் முறையீடு

by admin

வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பம் , அச்சுவேலி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பம் முறையிட்டு உள்ளது. 


அச்சுவேலி மேற்கு , ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்து வீட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 


வீட்டின் கேட் , யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை சேதப்படுத்தி , வீட்டில் இருந்த தம்பதியினரையும் மிரட்டி விட்டு சென்று இருந்தனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 1 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருள் சேதமாகியுள்ளது. 


அது தொடர்பில் இரவே அச்சுவேலி காவல்நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். இருந்த போதும் இன்றைய தினம் காலை 10 மணி வரையில் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. 
அதனால் நேற்றைய தினம் இரவு முழுவதும் வீட்டில் இருந்தோர் அச்சத்துடனே காணப்பட்டுள்ளனர். 


அந்நிலையில் காலை 10 மணி வரையில் காவல்துறையினா் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர். 


தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீடு , அச்சுவேலி காவல்நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More