Home இலங்கைமந்திகையில் உயிரிழந்த 15மாத குழந்தைக்கும் கொரோனோ

மந்திகையில் உயிரிழந்த 15மாத குழந்தைக்கும் கொரோனோ

by admin

பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலை  வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று புதன்கிழமை  மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், மந்திகை ஆதார மருத்துவமனை கொவிட்-19 சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் , வல்வெட்டித்துறையைச் சேரந்த 72 வயது பெண்ணும்  உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை திக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More